Monday, September 20, 2010

மனைவி அமைவதெல்லாம் .........

"இந்தாங்க சாவி 
மறந்துட்டீங்க..."

சிரித்தேன் !

"சாப்பாடு பாத்திரம் 
எடுத்துக்கலையா ? ....."

சிலிர்த்தேன் !

பைக்கை உதைத்து
அலுவலகம் வந்தேன் !

"ஹலோ ! 
மறந்துடாம மத்தியானம் 
மருந்து சாப்பிடுங்க..."

பணியில் மூழ்கினேன் !

"மணி 3 00  இன்னும் 
நீங்க சாப்பிடலையா ?
சீக்கிரம் சாப்பிடுங்க"

"ஒரு டீ குடிச்சுட்டு 
வேலை பாருங்க  
4௦௦ 00 மணி ஆகுது 
தலை வலிக்கும் .."

"இவ்வளவு 
சோர்வா வர்றீங்க.." 
முந்தானை எடுத்து
முத்தான வியர்வை
துடைத்தாள்!

என் சட்டை களைந்தாள்!

"சுடுநீர் வச்சுருக்கேன் 
குளிச்சுட்டு வாங்க"

தலை துவட்டி
முடி கோதினாள்!

"ஆ .....ஆ ......"

"சூரியன் முகத்தில் விழுறது 
தெரியாம தூக்கத்த பாரு "

இதெல்லாம் கனவா ?

வேக வேகமாக
வேலைக்கு புறப்பட்டேன்!

Tuesday, September 14, 2010

நீ அழகு.....



நீ 
அழகு!
நிலா அழகு!
அதற்காக
நிலாவோடு
உன்னை ஒப்பிடமுடியாது !


#          #         #          #


நீ
மென்மை!
அனிச்சமும் மென்மை!
அதற்காக
அனிச்ச மென்மையை
உன்னோடு ஒப்பிடமுடியாது !


#          #          #          #


உன்
ஸ்பரிசம் மோகம்! 
தென்றல் மோகம்!
அதற்காக
தென்றலோடு
உன் ஸ்பரிசத்தை ஒப்பிடமுடியாது !


#          #          #          #


உன்
கூந்தல் கருமை
மேகக்குளுமை
என்று கூறமுடியாது !


#          #          #          #


உன்
கழுத்து அழகு!
என்பதற்காக
சங்கோடு ஒப்பிடமுடியாது


#          #           #          #


உன்
இதழ்கள்
சிவப்பென்பதற்காக
மாதுளை
முத்துக்களோடு ஒப்பிடமுடியாது!


#          #          #          #
 
உன்
நாசி அழகு!
அதற்காக
சங்குப்பூவோடு ஒப்பிடமுடியாது!


#          #          #          #


உன்
கண்பாவை அழகு !
என்பதற்காக
திராட்சை கனிகள்
என்று வர்ணிக்கமுடியாது !


#          #          #          #


இவை
எவற்றோடும்
உன்னை ஒப்பிடமுடியாது !


ஏனென்றால்....


இவை
எவற்றோடும்
ஒப்பிடமுடியாத
ஒப்பற்ற அழகு
நீ  !!


#          #          #          #