Saturday, October 16, 2010

கடவுள் எங்கே? (கண்டால் வணங்குங்கள்)

      கண்ணிலாதான் கண்ட களிறு !
ஹ  .. .ஹ ... ஹ ...ஹ ..
ஹா.. ஹ ..ஹா..... ஹ

தூண் போன்றது !
துடிக்கும் குழல் போன்றது !
கேசமுள்ள கயிறு !
இதுதான் களிறு !

(களிறு = யானை)


நல்லாயன்,
நல்லவன்,
எல்லாம் வல்லவன்,
தூணுள்ளும் துயில்பவன்,
மிகப்பெரியவன் !

பானை வயிறவன் !
பகுதி பாவை இவன் !
குறுக்கிலும் நெடுகிய
கம்பத்தில் குற்றமியற்றிய
கொடும்பாவிகளுக்காய்
குருதி சுரந்தவன்!

சமஸ்கிருதத்தில்
சாய்ந்து உறங்குபவன் !
எபிரேயத்தில்
ஏகாதிபத்தியம்
செய்பவன் !
உதித்தானவன் !
உருதுக்குள் மட்டும்
உறைபவனிவன் !


மெழுகு வர்த்தி,
பேரீச்சம் பழம்,
தேங்காய்,
உப்பு,
பழம் பாயசம் 
காணிக்கையாக
கையேந்துபவன் !

குர் ஆனிலும்
கீதையிலும்
பழைய புதிய
ஏற்பாடுடையவன் !
ஏற்புடையவன் !



தூண் போன்றது !
துடிக்கும் குழல் போன்றது !
கேசமுள்ள கயிறு !
இதுதான் களிறு !


கண்ணிலாதவன் !
காதும் கேளாதவன் !
பிறவி ஊமை !

செத்துப்போனவன் !
செயலற்றவன் !
கல்லறைக்குள்ளிருந்தும்
காசு பார்ப்பவன் !


தூண் போன்றது !
துடிக்கும் குழல் போன்றது !
கேசமுள்ள கயிறு !
இதுதான் களிறு !


சலாமிட்டு
கைகூப்பி
மண்டியிடுபவன் !

குலாம் கலாம்
ஜோசப் பீட்டர்
முனி ஆண்டி !

பானு பேகம்
பாகம்பிரியாள்
இருதய மேரி !

இமயப்பனியுள்
இமையாதுறைபவன் !


கொட்டு முரசு 
கொட்டி 
கோவிலில்
ஆடு வெட்டினால் 
அறியாதவனுக்கு 
அவன் ஆண்டவன் 

ஆட்டுக்கு ......?

கல்லெறிந்து
கருஞ்சைத்தானைக்
கொன்றால் 
கடவுள் காப்பாற்றப்படுவான் 
நெருக்கடியில் 
நொந்து தவிப்பவனை .......?

ரத்தத்தையும் 
சதையையும்  
நாக்குக்கடியில் 
சுவைத்துண்பதால்
சிலுவையில் 
செத்தவன் 
சினம் தணிவதில்லை !

நல்லவர்களும் 
ஞானிகளும் மட்டுமே 
கடவுளை 
காணமுடியுமென்று 
உணரப்பட்டதாக -
உளறப்பட்டதால் 
எல்லோரும் 
தாடி வைக்கிறார்கள் !
ஞானிகளாக 
நடிக்கிறார்கள் !

கேடிகள் 
கோடிகளானதால்
கோவில் உண்டிகள் 
காட்டருவிகளாய்
கொட்டுகின்றன !

ஞானக்குளிப்பு 
நன்றாய் குளித்தாலும் 
மார்பின் குறுக்கே 
மதக்கயிறிட்டாலும்
உறுப்பின் ஒரு முனையை 
உள்ளறுத்தாலும்
கடவுள் இனிமேல் 
கட்டாயம் வரமாட்டான் !


இறைவன் இருந்தால் 
இறைவனாய் நினை !
சடங்கிற்க்குள்
சமாதியாக்கிவிடாதே !


தூண் போன்றது !
துடிக்கும் குழல் போன்றது !
கேசமுள்ள கயிறு !
இதுதான் களிறு !

மதத்துள் 
மயங்காதே !
மனிதனாய் வாழ் !


பயம் 
பற்றிகொள்வதால் தானே 
படைத்தவனை 
வணங்குகிறாய் !

படைத்தவன் 
இறைவனென்றால் 
பெற்றோரை வணங்கு !

இறைவன் 
எங்கும் இல்லை !
உன்னுள் நீ !
                      
                    - கண்ணிலாதவன்-

4 comments:

  1. நன்றி நண்பா. எனது கொள்கையில் உன்னை ஈர்த்துவிட்டேன் என்று சந்தொஷபடுகிறேன்.சிறுவயதில் நான் படித்தகவிதை ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது.பகவத் கீதை இந்துக்களையும் ,பைபிள் கிற்ிஸ்தவர்களையும் ,குர் ஆன் முஸ்லிம்களையும் உருவாக்கியது போதும்.... இனியாவது அவை மனிதர்களை உருவாக்கட்டும்.
    மும்மதத்தையும் ஒன்றாக்கி ஆத்திகமாக்கி அதன் பின் நாத்திகத்துள்ளும் தாவியிருக்கிராய்.மூன்று படிம கவிதை.நல்ல சிந்தனை.தேசிய கீதத்தை தொடர்ந்து செல்லுகிறாய்.இன்னொரு தாகூர்...

    ReplyDelete
  2. பிரபஞ்சம் என்ற புதிய பிளாக் தம்பி முத்துகுமார் கவிதையில் புதிய ஆரம்பம். பொதுவாக முதலில் கடவுள் வாழ்த்து ஆரம்ப பாடலாக இருக்கும். இங்கும் அப்படியே உண்மையிலேயே கடவுளை நேசிப்பவர்கள் இப்படியும் கடவுள் வாழ்த்து பாடுவார்கள் என்பதற்கு கவிதை சாட்சி.

    ReplyDelete
  3. Hi anna, very strong words from you this time and I find truth flowing everywhere throughout the verses.
    I abide with you in opposing most of the customs in the name of religion that are followed nowadays that do more harm to mankind instead of spreading spirituality.

    But my humble opinion towards 'following good customs' that may help living beings are,

    If we write an exam, we follow certain rules, we write it in an exam hall.
    If we work in an office, same applies,
    If we drive a motor vehicle, again same rules apply.
    whatever in life we do, we follow certain rules, and do at the right place.
    So I wish if people want to realise GOD[who believe there's a supreme power], they should follow a simple set of rules like purity of mind, hygiene etc etc, go to a place of worship without disturbing others.
    I believe thats what you also intend to tell.

    We are proud of you anna. A very talented creator.

    ReplyDelete
  4. excellent! nothing can replace these thoughts!
    அதிக நேரங்களில் பக்தர்களாய் இருக்க ஆசைப்படுபவர்கள் மனிதர்களாய் இருக்க மறந்து விடுகிறார்கள்.
    கடவுள் இல்லை என்று சாடுபவர்களும் உண்மை இதுதான் என்று தெளிவாக உரைப்பதில்லை.

    பாவம் செய்யாமல் மற்றவர்களிடம் பரிவாய், பொறுக்கின்ற நேரத்தில் பொறுத்து பொங்கிஎளுகின்ற நேரத்தில் எழுந்து வாழ்க்கையை வாழ்க்கையாய் வாழ்ந்தால் நாம் தான் கடவுள்.

    ReplyDelete