Thursday, October 7, 2010

கருத்தரிக்கமாட்டேன் !


மலடி என்று
மனித மாக்கள் என்னை
மறுத்து விடினும்  ...........

உடல் வேட்கை
உன்மத்தமாகி என்னுள்
உறங்கா விடினும் .........

தாய்மையின்
தூய்மை உணராது
துவண்டு விடினும்  ................

நான் .........

கருத்தரிக்கமாட்டேன் !

#               #               #               #  

ஆதி முதல்
அடக்கம் வரை
அசூயைக்குள் நீ
அந்தமாகாதிருப்பதற்காக.......

அறிவெனும்
அனர்த்ததிற்குள் உன்
ஆன்மா
அலையாதிருப்பதற்காக.......

பணமெனும்
பிணத்துக்குள் உன்
சிந்தை
சிதிலமாகாதிருப்பதற்காக.......

உறவெனும்
உறைக்குள் உன்
உணர்வுகள்
உழலாதிருப்பதற்காக.......

நல்லவர் போன்ற
நயவஞ்சகத்துக்குள் உன்
நாணயம்
நாசமாகாதிருப்பதற்காக.......

பிறவியின்
பேதமையால் நின்
பெற்றோரை
நிந்திக்காதிருப்பதற்காக.......

நான் ..........

கருத்தரிக்கமாட்டேன் !

#               #               #               #

உலக உருண்டையை
உருத்தறித்து
உண்மை உலகை
உருவாக்கும்வரை........

நான் .....


கருத்தரிக்கமாட்டேன் !

#                #               #               #

மனிதனை மனிதன்
அழிக்கும் மண்ணில் - உன்னை


கருத்தரிக்கமாட்டேன் !

இல்லாத சாதிக்குள்
இறைவனை இணைக்கும்
இழிவான உலகில் - உன்னை


கருத்தரிக்கமாட்டேன் !

இல்லாத இறைவனுக்காக
இருப்பவர்களை மாய்க்கும்
இகழ்வான உலகில் - உன்னை


கருத்தரிக்கமாட்டேன் !

#               #              #               #

என்
உணர்வுக்குள்ளும்
உடலுக்குள்ளும்
உயிருக்குள்ளும்
உருவாகாமல்


உறங்கிவிடு !


ஒளிந்துவிடு !


ஒழிந்துவிடு !

#              #               #               #

இந்த
மாய உலகில் உனக்கு
மறுபிறவி வேண்டாம் !
மகனே !


அருவத்தை
உருவத்துள்
அடக்கும்
அற்பப் பிறவி வேண்டாம்!


இந்த
பிரபஞ்சம் அறியாத
புதிதொரு
பிரபஞ்சத்தில் என்றாவது
ஒருநாள்
பிறக்கவைப்பேன்!
பொறுத்திரு  !
                                      - ஒரு பிரபஞ்ச தாய் -

4 comments:

  1. //பணமெனும்
    பிணத்துக்குள் உன்
    சிந்தை
    சிதிலமாகாதிருப்பதற்காக//

    பிறவா நிலையின் தேவை
    தங்கள் கவிதையின் வரிகளில்
    மிகவும் நன்று

    ReplyDelete
  2. பிரபஞ்ச தாய் .....
    அறியாமை இருளுக்குள் ...
    வருவதும் ....பெறுவதும்.....
    பிரபஞ்சத்தின் வியாபார கணக்கு..
    தாய்க்கு ஏற்படும்
    மனக்குழப்பம்
    சுற்றம் தரும் வேதனை.
    உடைத்து வெளி வந்தால்
    புத்துலகு படிக்கலாம்.
    தாயே
    மனம் மாறு.
    மலடி என்ற பெயர் மாற
    இல்லை.....இல்லை....
    வெடி என்றும் இடி என்றும்
    உரு மாற...

    ReplyDelete
  3. nee ellam manusnaa? ethunai nallai enga poi irunthai ? paavi paavi.
    arul&co

    ReplyDelete
  4. Aiogo,

    nettri pottil adikum aanitharaamana varthaigal, Nee enna mesai vaikkatha kuttai Bharathiyo! On tamil thodarutum.

    Warm regards

    Natesh

    ReplyDelete