Monday, September 20, 2010

மனைவி அமைவதெல்லாம் .........

"இந்தாங்க சாவி 
மறந்துட்டீங்க..."

சிரித்தேன் !

"சாப்பாடு பாத்திரம் 
எடுத்துக்கலையா ? ....."

சிலிர்த்தேன் !

பைக்கை உதைத்து
அலுவலகம் வந்தேன் !

"ஹலோ ! 
மறந்துடாம மத்தியானம் 
மருந்து சாப்பிடுங்க..."

பணியில் மூழ்கினேன் !

"மணி 3 00  இன்னும் 
நீங்க சாப்பிடலையா ?
சீக்கிரம் சாப்பிடுங்க"

"ஒரு டீ குடிச்சுட்டு 
வேலை பாருங்க  
4௦௦ 00 மணி ஆகுது 
தலை வலிக்கும் .."

"இவ்வளவு 
சோர்வா வர்றீங்க.." 
முந்தானை எடுத்து
முத்தான வியர்வை
துடைத்தாள்!

என் சட்டை களைந்தாள்!

"சுடுநீர் வச்சுருக்கேன் 
குளிச்சுட்டு வாங்க"

தலை துவட்டி
முடி கோதினாள்!

"ஆ .....ஆ ......"

"சூரியன் முகத்தில் விழுறது 
தெரியாம தூக்கத்த பாரு "

இதெல்லாம் கனவா ?

வேக வேகமாக
வேலைக்கு புறப்பட்டேன்!

3 comments:

  1. அம்பிக்கு இன்னும் கல்யாணம் ஆகலை போல :-)

    ReplyDelete
  2. ha..haa... nalla humor,
    aanaal indha kavithai publish aana piragu, veettil 'comedy time-aa' illa 'serious time-aa'??????!!!!!!

    ReplyDelete
  3. என்ன ஒரு தைரியம். வூட்ல கம்ப்யுடர் பக்கம் தல வச்சு படுக்குரதில்லையோ.....!

    ReplyDelete