Friday, July 1, 2011

கல்லறையில் நான் எழுதிய கவிதை !



முத்தெடுத்து தருகின்றேன் முத்தமிழில் முழுகி !
செத்துவிட்ட பின்னாலும் செந்தமிழைத் தழுவி !
கொத்தெடுத்து சூடினாலும் குழல்விட்டு நழுவி 
பத்தினியா போய்விடுவாள் படிதாண்டி வழுவி!


உடலழுகி போவதற்குள் உறவினர்கள் வந்து 
கடலெனவே அழுதாலும் கண்ணீரில் நொந்து 
உடலுருகிப் போனாலும் உந்திவிட்ட பந்து
சடலமென ஆனாலும் சாற்றுகிறேன் சிந்து !


விட்டுவிடு தலையாகி விலகுகிறேன் உலகை!
சட்டியுடைத்த பின்னாலே சந்தனத்தில் பலகை!
தொட்டிலிட்டு எனதுடலை தூக்கியது சிலகை!
மட்டையான உடலத்தில் மாரடிப்பில் பலகை !


நால்வருக்கு நன்றிசொல்ல நானுமங்கு இல்லை!
வாழ்வழிந்த உடலிதுவும் வாடிவிட்ட முல்லை!
ஊழ்வினையை அழிப்பதற்குள் உலகமகா தொல்லை!
காழ்மனமாய் இருந்தாலும் கல்லறைதான் எல்லை!

                                         - செத்து விட்ட முத்து கவி -



( இந்த கவிதை 08-06-1987 அன்று ஒரு தனிமை இரவில் கல்லூரி விடுதி அறையில் எழுதியது  ) 

3 comments:

  1. நல்லா இருக்கு தோழர் இன்னும் நல்லா சிந்திங்க அங்கதம் படிமம் புதுகவிதைக்கும் சில இலக்கணம் உண்டு அதையும் தெரிஞ்சிகிங்க

    ReplyDelete
  2. நன்றி! எனது இனிய நண்பரே!

    ReplyDelete
  3. இவ்வளவு நாளா எனக்கு காண்பிக்கவே இல்லயே எனக்கு இந்த கவிதையை

    ReplyDelete